வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மையம்: மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

Forums Communities Fishermen வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மையம்: மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #7617
    Kalyanaraman M
    Keymaster

    வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி உள்ளதால், பலத்த தரைக் காற்று வீசும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வடமேற்கு வங்கக் கடல் மற்றும் ஒடிசாவை ஒட்டியுள்ள கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால் தமிழகத்திற்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என்ற போதிலும், வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக் காற்று வீசும் எனவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனிடையே தென்மேற்கு பருவமழை வலுப்பெற்றுள்ள நிலையில், நீலகிரி, கோவை, தேனி, நெல்லை மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வெப்பச் சலனம் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This