தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மலையேற்றம் சென்ற 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விசாரிக்க அதுல்யா மிஸ்ராவை தமிழக அரசு நியமித்தது. விபத்து நிகழ்ந்த பகுதியில் உள்ள மக்கள், வன அதிகாரிகள், விபத்தில் சிக்கி இறந்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்டவர்களிடம் அதுல்யா மிஸ்ரா விசாரணை நடத்தினார். விசாரணை நிறைவடைந்த நிலையில், அது தொடர்பான அறிக்கையை முதலமைச்சர் பழனிசாமியிடம் அதுல்யா மிஸ்ரா வெள்ளியன்று தாக்கல் செய்தார். 125 பக்கங்கள் கொண்ட அறிக்கையில், வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த கட்டுப்பாட்டு அறையுடன் கூடிய குழு ஒன்றை ஏற்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.