நாகையில் உள்ள தமிழ்நாடு ஜெயலலிதா மீன் வளப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் பணியிடம் காலியாக இருந்த நேரத்தில் நபார்டு நிதியில் பல முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்போது பல்கலைக்கழக பதிவாளராக இருந்த ரத்னகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட குழுவை நபல்கலைகழகத்தின் நிர்வாகம் நியமித்துள்ளதாக பேராசிரியர் ஒருவர் கூறுகிறார்.