கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணையை திருத்துவதை எதிர்த்து மீனவர் சங்கம் மனு

Forums Communities Fishermen கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணையை திருத்துவதை எதிர்த்து மீனவர் சங்கம் மனு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #7544
  Inmathi Staff
  Moderator

  மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணையில்
  திருத்தம்!
  CRZஅறிவிப்பாணை-2011,திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தக் கோரி,மீன்வளத்துறை இயக்குநரிடம் நேரில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

  மத்திய சுற்றுச்சூழல்,வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை,கடந்த 02.07.2018 அன்று தங்களது இணையதளத்தில்,
  S.O.3197(E) கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை -2011 ல் 16 வது முறையாக திருத்தம் வெளியிட்டுள்ளது.
  இதனை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தக்கோரி, 12.07.2018
  அன்று மாலை மீன்வளத்துறை இயக்குநர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் அவர்களை நேரில் சந்தித்து தென்னிந்திய மீனவர் நலச் சங்கத் தலைவர் கு.பாரதி மனு அளித்தார்.

  மத்திய சுற்றுச்சூழல் துறை சிஆர்இசட் அறிவிப்பாணை 2011, ல் கொண்டுவந்துள்ள திருத்தத்தில்,

  * சிஆர்இசட் அறிவிப்பாணை 2011, பிரிவு 1, உட்பிரிவு( 3) ல்,
  உயரலைக்
  கோட்டிலிருந்து( HTL) 500 மீட்டருக்கு அப்பால் அபாயக்கோடு ( HAZARD LINE)
  அமைந்தால்,
  உயரலைக்
  கோட்டிலிருந்து அபாயக்கோடு வரை சிஆர்இசட் பகுதியாகவும்,கடலோடு நேரடியாக தொடர்புடைய நீர்நிலைகளில் உயரலைக்
  கோட்டிலிருந்து 100 மீட்டருக்கு அப்பால் அபாயக்கோடு அமைந்தால்,
  உயரலைக்
  கோட்டிலிருந்து அபாயக்கோடு வரை சிஆர்இசட் பகுதியாகும் என இருந்ததை, தற்போது கடற்கரையில் 500 மீட்டர்,கடலோடு தொடர்புடைய நீர்நிலைகளில் 100 மீட்டருக்குள் அபாயக்கோடு அமையும் வகையில் திருத்தி உள்ளது.

  # இதனால்,2004 ம்
  ஆண்டு சுனாமி பேரலை தாக்கத்திற்கு பிறகு,மத்திய அரசு சிஆர்இசட் அறிவிப்பாணை-2011 ல், அபாயக்கோட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்தது.மேலும் அபாயக்கோடு என்பது உலக வெப்பமயமாதல், கடல் மட்ட உயர்வு, சுனாமி பேரிடர் மற்றும் இயற்கை சீற்றங்களால் எளிதில் பாதிக்கக்கூடிய பகுதிகளை குறிக்கக்கூடியது.இந்த பாதிப்பு 100 மீட்டருக்குள் நடந்தாலும்,500 மீட்டருக்கு அப்பால் நடந்தாலும் பாதிப்பு பாதிப்புதான்.
  சிஆர்இசட் எல்லை என்பது அபாயக்கோட்டை மட்டுமே வைத்து சிஆர்இசட்-2011 ல், வரையறுக்கப்பட்டது.
  அபாயக்கோடு வரையரை செய்த பகுதிகளில் எந்த திட்டங்களுக்கும் அனுமதி கிடையாதுஇதனால் வரி பணம் பாதுகாக்கப்படுவதுடன்,உயிர் சேதங்களும்,
  பொருட்சேதங்களும் எதிர்காலத்தில் ஏற்படாமல் தவிர்க்கப்படும்.

  ** பிரிவு 5 உட்பிரிவு (3 ) ல்,அலைதாக்கம் உள்ள பகுதிகள்,அலைகள்,
  கடல் மட்ட உயர்வு,கடற்கரை மாற்றம் ஆகியவற்றை மனதில் வைத்து மத்திய சுற்றுச்சூழல் துறை வழியாக மத்திய நில அளவைத் துறை ( SOI) மூலம் நாட்டின் ஒட்டுமொத்த கடற்கரையிலும் அபாயக்கோடு வரையரை செய்யப்படும் என்று இருந்தது. தற்போது இதை நீக்கி,மத்திய நில அளவை துறை (SOI) அபாயக்கோடு செய்து முடித்து தேசிய கடலோர நிலைத்திட்ட மேலாண்மை மையம் ( NCSCM) வழியாக ஒப்படைக்க வேண்டுமென்று திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

  ## மத்திய சுற்றுச்சூழல் துறை தனது பொறுப்பை தட்டிக்கழித்து,அரசு சார்ந்த NCSCM துறைக்கு மட்டும் பொறுப்பு கொடுக்கும் போது தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. ( எ.கா)
  வரைவு கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம்-2018 ல் செய்த உயரலைக்கோட்டிலும்,சுற்றுச்சூழல் ரீதியாக எளிதில் பாதிக்கக் கூடிய மண்டலங்களை மாற்றியமைத்ததில் NCSCM தெரிந்தே செய்த தவறுகள்.

  *** பிரிவு 5 உட்பிரிவு(5) ல் அபாயக்கோடு 1:25000 மைக்ரோ அளவிலும், 1:10000 உள்ளூர் அளவிலும் இருக்க வேண்டும் என இருந்தது. இதனை திருத்தி,அபாயக்கோடு கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்தில் எந்த அளவில் வேண்டுமானாலும் கொண்டு வரக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளனர்

  **** பிரிவு 8 உட்பிரிவு (1) (1) CRZ-1 ல் ஏற்கனவே அனுமதிக்கப் பட்டிருந்த திட்டங்கள் தவிர்த்து,புதிதாக யுத்தி வாய்ந்த திட்டங்கள்,பாதுகாப்பு திட்டங்கள் சேர்க்கப் பட்டுள்ளது.

  #### யுத்தி வாய்ந்த திட்டங்கள்,பாதுகாப்பு திட்டங்கள் என்றால். என்ன? என்ற விளக்கமும் இத்திட்டங்களை
  CRZ-1 ல் ஏன் கொண்டுவர வேண்டும் என்ற விளக்கமும் இல்லை.
  மேலும்,சாகர்மாலா,
  ஸ்மார்ட் சிட்டி,பாரத் மாலா போன்ற திட்டங்கள் மத்திய அரசின் யுத்தி வாய்ந்த திட்டங்களாக மத்திய அரசு ஏற்கனவே விளம்பரங்கள் செய்து வருகிறது.

  சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதி 1986, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 பிரிவு 3 ன் கீழ்,சுற்றுச்சூழலை பாதுகாக்கவும்,
  அதற்காக கொண்டுவரப்படும் அறிவிப்பாணைகளை பாதுகாக்க மட்டுமே அதிகாரம் கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால் மத்திய சுற்றுச்சூழல் துறை தற்போது கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை-2011 ல் கொண்டுவந்துள்ள திருத்தமானது,சுற்றுச்சூழலை எளிதில் பாதிக்கப்படக்கூடிய இடங்களை பாதுகாப்பதற்கு பதிலாக,
  பலவீனப்படுத்தி வளர்ச்சிகளை மட்டுமே மனதில் வைத்து திருத்தம் கொண்டிவந்துள்ளதால் இதனை உடனே மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.என அந்த மனுவில்  கூறப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This