கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் அரையந்தோப்பு பகுதியில் கடும் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே கடல் சீற்றம் அதிகமாகவே காணப்படுகிறது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் இதே பருவத்தில் சீற்றம் அதிகமாக காணப்படும் கடல் பகுதியில், புதிய திட்டப்பணிகளை மேற்கொள்ளுவதன் மூலம் கடல் அரிப்பு அதிகரித்து, மீனவர்களின் குடியிருப்புப் பகுதிகளை ஆக்கிரமித்து விடுகிறது.
இந்நிலையில், தேங்காய்ப்பட்டனம் அரையந்தோப்பு பகுதியில் கடல் சீற்றம் நேற்று அதிகமாக இருந்த நிலையில் அங்கிருந்த சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. அதோடு, கடல் அலையானது, கடல் மணலை குவித்து வருகிறது. இதனால், கருங்கல், மார்த்தாண்டம் உள்ளிட்ட முக்கியப்பகுதிகளுக்கு அந்த வழியாக சென்று கொண்டிருந்த பஸ்கள் இயக்க முடியாத நிலையில் தள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மீனவர்களும், பள்ளி செல்லும் குழந்தைகளும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். அரசு, இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என முன்னாள் ஒன்றிய கவுன்சிலர், குமரி ஜோர்டான் கூறியுள்ளார்.