தமிழகத்தில் கடலில் காணாமல் போகும் மீனவர்களை கண்டு பிடித்து வர வேண்டி அதி நவீன கடல் ஆம்புலன்ஸ் உருவாக்க மீனவர் ஒருங்கிணைப்பு சங்கம் முடிவு செய்துள்ளது. இது குறித்த அச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம்
கப்பல் கேப்டன் திரு.ஜாண்சன் தலைமையில் நடத்தப்பட்டது.
அதோடு கப்பல் செய்யும் MMD மெற்கண்டல்.மரைன் .டிப்பாற்ட்மென்ட் அரசு அனுமதி பெற்ற கப்பல் செய்முறை அறிந்த
பொறியாளர்கள் குளச்சலில் இரண்டு மணிக்கு திரு.ஜாண்சன் தலைமையில் திரு.விக்னேஸ் திரு.மன்ஜிஸ் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.
கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடலில் மீனவர்கள் தத்தளிக்கும்போது கப்பல் மாலுமிகளிடம் எப்படி தொடர்பு கொண்டு பேசுவது எதை பேசுவது எந்த வார்த்தை பேசுவது போன்ற ஆங்கில உச்சரிப்புகளை தமிழில் பார்த்து படித்து பயன் பெறும் வகையில் ஒரு நகல் கேப்டன் திரு.ஜாண்சன் வடிவமைத்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவர்ளுக்கும் அதனை வழங்கி பயனடையச் செய்வது எனவும், தமிழகத்தில் கடலில் காணாமல் போகும் மீனவர்களை கண்டு பிடித்து வர வேண்டி அதி நவீன கடல் ஆம்புலன்ஸ் ஒன்றை உருவாக்குவது எனவும், அதோடு ஆழ்கடலில் தெழில் செய்வோர்க்கு வானிலை வழங்குவது கடல் வளம் பாதுகாப்பு பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தகவல் பரிமாற்றம் சேவைகள் என பல முயற்சிகளை செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.