Forums › Communities › Farmers › புகைப்படம் மூலம் பயிர் நாசத்தை அளவிட்டு காப்பீடு வாங்க முடியும்-அமெரிக்க பொருளாதர நிபுணர்
- This topic has 1 reply, 2 voices, and was last updated 2 years, 9 months ago by
D Barani.
-
AuthorPosts
-
July 12, 2018 at 5:54 pm #7141
Inmathi Staff
Moderatorபயிர்களை புகைப்படம் எடுத்து அனுப்பி அதன் மூலம் பயிரின் வளர்ச்சி பற்றி அறிந்து பயிர் காப்பீட்டு தொகை வழங்கமுடியும் என சென்னை எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையில் நேற்று நடந்த கருத்தரங்கில் அமெரிக்காவின் பெர்பெர் க்ரமெர் கூறினார்.
இந்த கருத்தரங்கில் உரையாற்றிய இன்டர்நேஷனல் ஃபுட் பாலிசி ரிசர்ச் இன்ஸ்டிடூயுட்டை சேர்ந்த பொருளாதார நிபுணர் க்ரமெர், பயிர்காப்பீடு இந்தியா போன்ற பெரிய விவசாய நாட்டுக்கு அவசியம். பயிர் காப்பீடு வழங்குவதற்கு பாதிக்கபப்டட் விவசாயி தன் பயிர்களை புகைப்படம் எடுத்து அனுப்பினால் அதில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைக் கொண்டு பயிர் இழப்பை அறிய முடியும். அதன் அடிப்படையில் பயிர்களுக்கு காப்பீடு வழங்கலாம். ஹரியானா மற்றும் பஞ்சாபில் இந்த முறையைக் கையாண்டோம். அது வெற்றியைக் கொடுத்தது என்றார்.
அதனைத் தொடர்ந்து கேள்வி எழுப்பிய தஞ்சாவூர் விவசாயி, ஸ்மார்ட் போன் கொண்டு புகைப்படம் எடுத்து அனுப்புவதெல்லாம் சாமான்ய விவசாயிக்கு சாத்தியம் இல்லை. இதை ஏன் அரசே ஸ்டேட்லைட் மூலம் புகைப்படம் எடுத்து உதவக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்.
ஆனால் பயிர் காப்பீட்டை பொறுத்தவரை களநிலவர்ம் வேறாக உள்ளது. வெள்ளம், இயற்கை சீற்றம், தீ என பயிர்கள் அழிந்தால் விவசாயிகளுக்கு உடனே பயிர் காப்பீட்டுத் தொகை கிடைப்பதில்லை. காரணம் தனியார் வங்கிகளிடம் இந்த காப்பீட்டு வசதியை அரசு ஒப்படைத்துள்ளது. அண்மையில் மகாராஷ்ட்ராவில் விவசாயிகளுக்கு வெறும் 1 ரூபாய், 2 ரூபாய்-5 ரூபாய் என காப்பீட்டு தொகை வழஙியதில் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பயிர் காப்பீட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக எப்படி செயல்படுத்துவது என்பதை பொருளாதார அறிஞர்களுடன் விவசாயிகளும் சேர்ந்து உரையாடினால்,விவாதித்தால் மட்டுமே விடை கிடைக்கும்.
July 13, 2018 at 11:16 am #7592D Barani
Participant- பயிர் காப்பீட்டு திட்டத்தைப் பற்றி என்னை போன்ற ஏராளமான விவசாயிகளுக்கு எதிர்மறையான கருத்துதான் நிலவுகிறது.
For example.
சென்ற புயல் வெள்ள சேதத்தின் போது நாகை மாவட்டம் திருக்குவளை வட்டத்திற்கு (முதலமைச்சர் கலைஞரின் பிறந்த ஊர்) 99 %, அருகாமையில் உள்ள சிக்கல் வட்டத்திற்கு 63 % , 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எங்கள் கிராமத்திற்கு 0.1% கொடுக்கப்பட்டது.
இதுபோன்ற நேர்மையான அதிகாரிகளை கொண்டு எவ்வாறு இழப்பீடு வழங்குவது?
நநாகை மாவட்டம் high risk zone ல் வருகிறது.ஆகையால் 1 ஏக்கருக்கான premium 32% சுமார் 1 ஏக்கருக்கு 8250 ரூ. இதில் விவசாயின் பங்கு 250 மட்டுமே. மீதி தொகையை மத்திய மாநில அரசுகள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்குகிறது. அவ்வாறு வழங்காமல் விவசாயிகளிடம் நேரடியாக அந்த பணத்தை வங்கி கணக்கில் செலுத்தி விருப்பமுள்ள விவசாயிகளை காப்பீடு எடுத்து கொள்ளும்படி அறிவுறுத்தினால், காப்பீடு நிறுவனங்களின் மோசடி தவிர்க்கப்படும்.
-
AuthorPosts
- You must be logged in to reply to this topic.