பயிர்களை அழிக்கும் காட்டுப் பன்றிகளை தடுக்க எளிய வழி!

Forums Communities Farmers பயிர்களை அழிக்கும் காட்டுப் பன்றிகளை தடுக்க எளிய வழி!

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #7137
  Inmathi Staff
  Moderator

  காடுகளுக்கு அருகிலோ மலை அடிவாரத்திலோ தோட்டம், வயல் இருந்தால் அங்கு காட்டுப் பன்றிகள் தொல்லை தாங்கவியலாது. வயலில் இருக்கும் பயிர்களை நாசம் செய்வதுடன் குழிகளை பறித்து அட்டூழியம் செய்யும்.

  ஒரு விவசாயி தன் மொத்த வயலுக்கு வேலி அமைப்பது கடினம். அதற்கு நிறைய பணம் செலவாகும். அதற்காக காட்டுப் பன்றிகளை அனுமதிக்க முடியுமா? அப்படியானால் காட்டுப்பன்றிகளை துரத்த வழி இருக்கிறதா என கேட்பீர்கள்.

  ஆம். வழியிருக்கிறது. வீட்டில் இருக்கும் மிளகாய்த்தூளை உங்கள் தோட்டத்தின் நான்கு திசைகளிலும் தெளித்துவிட்டால் காட்டுப் பன்றிகள் வராது. இதனை மேட்டுப்பாளையம் பகுதியில் வாழும் பல விவசாயிகள் அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளார்கள். பன்றிகளின் பலமே அதன் மோப்பத் திறன் தான். மிளகாய் பன்றிகளின் மோப்பத் திறனை பாதிப்பதால் தொடர்ந்து மூன்று நான்கு நாட்களுக்கு மிள்காய்த்தூளை தூவினால் பன்றிகள் அப்பக்கமே வராது. செய்து பாருங்கள். உங்களனுபவத்தை இன்மதி.காம்-க்கு எழுதுங்கள்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This