மக்கள் நீதி மய்யத்தின் தற்காலிக உயர்நிலைக்குழு கலைக்கப்படுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நடிகர் கமல்ஹாசன் கட்சிக்கொடியை ஏற்றிவைத்தார். இதைத்தொடர்ந்து பேசிய அவர் மக்கள் நீதி மய்யத்தின் தற்காலிக உயர்நிலைக்குழு கலைக்கப்படுவதாக கூறினார்.
உயர்நிலைக்குழுவில் இருந்தவர்கள் செயற்குழு உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என்றும் நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். உயர்நிலைக்குழுவில் இருந்து ஸ்ரீபிரியா, கமீலா நாசர், பாரதி கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.