தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று சில இடங்களில் நல்ல மழை பெய்தது. இன்றும் வெப்பசலனத்தின் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது கோவை, வால்பாறை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. மற்ற மாவட்டங்களிலும் அவ்வப்போது பெய்கிறது. இனி தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சமயங்களில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும.நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரையில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.