கர்நாடக மாநிலம் கபினி அணையில் நீர் நிரம்பிய காரணத்தால் உபரி நீர் காவிரியில் திறந்துவிடப்படுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3.27 அடி உயர்ந்தது.
கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழையின் காரணமாக அங்குள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன. அதனால் உபரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது. தற்போது 35,00 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. அதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து, தற்போது 71.76 அடிக்கு அணை நிரம்பியுள்ளது. இதே அளவில் நீர்வரத்து இருந்தால் அணையின் நீர்மட்டம் 80 அடிக்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் தமிழக அரசு குறுவைக்கு நீர் திறந்துவிடும் என எதிர்பார்ப்பு டெல்டா விவசாயிகளிடம் எழுந்துள்ளது.