தூத்துக்குடியில் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதை தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர். இந்நிலையில் காற்று மணிக்கு 80 கிலோ மீட்டருக்கும் அதிகமாக வீசவே மீன் வளத்துறை அதிகாரிகள் அவசரமாக மீனவர்களை தொடர்பு கொண்டு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினர். இது போன்றே ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீனவர்களும் மீன் பிடிக்க செல்லவில்லை.