2 நாட்களுக்கு மழை தொடரும்- சென்னை வானிலை மையம்

Forums Communities Chennai 2 நாட்களுக்கு மழை தொடரும்- சென்னை வானிலை மையம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #6955
    Kalyanaraman M
    Keymaster

    தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் கர்நாடகாவில் வலுவடைந்துள்ள நிலையில், நீலகிரிமற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வால்பாறை, தேனி, திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.அதிகபட்சமாக, கோவை சின்னக்கல்லாரில் 17 செ.மீ., வால்பாறையில் 15 செ.மீ., நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 11 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.தமிழகம் மற்றும் புதுவையில், இதர பகுதிகளில் வெப்பசலனம் காரணமாக ஒரிரு இடங்களில் மிதமான மழை பதிவாகியுள்ளது.

    அடுத்த 2 நாட்களுக்கு வெப்பசலனம் காரணமாக ஒரிரு இடங்களில் மிதமான மழை தொடரும்.ஜூன் 1 – ஜூலை 11 வரை பதிவான மழையின் அளவு 86 மி.மீ.,இயல்பான அளவு 68 மி.மீ.,இதன் மூலம் 27 சதவீத கூடுதல் மழை பதிவாகியுள்ளது.சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறினார்.

Viewing 1 post (of 1 total)

கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This