தனியார் சத்துமாவு நிறுவனம் ரூ.1,350 கோடி வரி ஏய்ப்பு செய்ததை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. கிறிஸ்டி பிரைடுகிரைன், அக்ரி உள்ளிட்ட 70 நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து சோதனை நடத்தி வந்தனர். சென்னை, பெங்களூரு, சேலம், திருச்செங்கோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 19 கோடி ரூபாய் பணம் மற்றும் 10 கிலோ தங்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
Source : Thanthi Tv