வயல்வெளிகளிலும் வயல்வெளியை ஒட்டிய வீடுகளிலும் பாம்பு நடமாட்டம் அதிகமிருக்கும். பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்னும்போது தனிமனிதன் கதி? பாம்பை பார்த்தால் உடனே அதை அடித்து கொல்லத்தான் வேண்டும் என்றுதான் இதுவரை பலர் நினைத்திருக்கிறோம். ஆனால் பாம்பை கொஞ்சமும் துன்புறுத்தாமல் அதன் நடமாட்டத்தைக்கட்டுப்படுத்த முடியும்.
எப்படி? உங்கள் வீடு வயலை ஒட்டி இருக்கிறது என்றால் வீட்டின் முன்புறம், பின்புறம் என அனைத்து இடங்களிலும் பினாயிலை தண்ணீரில் கலந்து தெளியுங்கள். குக்கிராமங்களில் பினாயிலுக்கு வாய்ப்பு இல்லை என்னும்போது அமிர்தாஞ்சன்,நீலகிரி தைலம் போன்ற அதீத நெடி உள்ள தலைத்தை சுடுநீரில் கரைத்து தெளித்தால் பாம்பு அண்டவே அண்டாது. முயற்சித்துப் பாருங்கள்.