இயற்கை விவசாயம் காப்பாற்றும் – எம்பிஏ படித்த தம்பதிகள் அனுபவ பகிர்வு!

Forums Communities Farmers இயற்கை விவசாயம் காப்பாற்றும் – எம்பிஏ படித்த தம்பதிகள் அனுபவ பகிர்வு!

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #6869

  மெத்தப் படித்தவர்கள், முன்னணி நிறுவனங்களில் உயர் பதவி வகித்தவர்களில் பலர் இன்று இயற்கை விவசாயத்தை நோக்கித் திரும்பி வருகின்றனர். அப்படி எம்.பி.ஏ படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பார்த்த சாரதி, ரேகா ராமு தம்பதி இயற்கை விவசாயத்துக்கு  திரும்பிய தங்கள் அனுபவத்தை நம் ஆசிரியர் எம்.ஜெ.பிரபுவிடம் பகிர்ந்துகொண்டதிலிருந்து…..

  ”பெரும்பாலான இளைஞர்களைப் போல் நானும் படித்துவிட்டு தனியார் கம்பெனியில் நல்ல வேலைக்குச் சேர்ந்தேன். திருமணம் செய்தேன். குழந்தையும் பெற்றுக்கொண்டோம். ஆனால் என் உடல்நிலையில் திடீரென ஏதோ கோளாறு ஏற்பட்டது. அந்தக் கோளாறுக்கு காரணம் தேடி அலைந்த போது நாம் உண்ணும் உணவுதான் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் என தெரிய வந்தது.

  சாப்பிடும் பல்வேறு உணவு பொருட்களில் 13% உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் மூலம் வந்த நச்சு இருப்பது ஒரு ஆய்வின் மூலம்  தெரிய வந்தது. அதன்பிறகு நச்சு இல்லாத உணவுக்கு எங்கே செல்வது, யாரைக் கேட்பது என்ற கேள்வி எழுந்தது” என்கிறார் பார்த்தசாரதி.

   

  அவரைத் தொடர்ந்த அவரது மனைவி ரேகா ராமு,” நச்சு இல்லாத உணவை தேடி அலைவதை விட அதை நாமே ஏன் உற்பத்தி செய்யக் கூடாது என்று யோசித்தோம். நானும் எம்.பி.ஏ முடித்துவிட்டு ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தேன். இயற்கை விவசாயம் தான் இனி எல்லாம் என்று முடிவு செய்த பிறகு அந்த வேலையை விட்டேன்.

  விவசாயத்தில் ஈடுபட்டோம். இப்போது பூங்கார், சீரக சம்பா,கிச்சடி சம்பா, கைவிறை சம்பா உள்ளிட்ட 8 வகை பாரம்பரிய நெல் வகைகளை பயிரிட்டு வருகிறோம். இதனை பயிர் செய்த பிறகு எங்கு மார்க்கெட்டிங் செய்வது என்ற நடைமுறை சிக்கல் வந்தது. அதனையடுத்து, எங்களைப் போல் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் உள்ளவர்கள் ஒருங்கிணைந்து ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட் என்ற  சந்தையை உருவாக்கினோம். தற்போது அதன் மூலம் இயற்கை விவசாய உற்பத்தி பொருட்களை விற்று வருகிறோம். நாங்கள் எங்கும் விளம்பரம் தராமலேயே விறபனை நடந்து வருகிறது” என்றார்.

  மரபணு மாற்றம் செய்யப்படட்க் கடுகுக்கு எதிராக குரல் கொடுத்தவர் பார்த்தசாரதி என்பது குறிப்பிடத்தக்கது.  தொடர்ந்த பார்த்தசாரதி, எங்கள் கிராமத்திலேயே மகளிர் சுய உதவி குழுகக்ள் மூலம் இயற்கை உணவுப் பொருட்களை தயாரித்து வருகிறோம்.  இயற்கை விவசாயத்துக்கு அனைவரும் திரும்ப வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்கிறார் வி.எம். பார்த்தசாரதி

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This