மீன்களில் வேதிப்பொருட்கள் கலக்கப்படுவதாக எழுந்த புகாரையொட்டி சென்னை மீன் மார்க்கெட்டுகளில் இன்று அதிகாரிகள் சோதனை செய்தனர். இன்று காலை 10 மணியளவில் சைதாப்பேட்டை மீன் சந்தைக்கு வருகை தந்த உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள், அங்கிருந்த மீன்களை சோதனை செய்து மீன் மாதிரிகளையும் எடுத்தனர் அவற்றை கிண்டியில் உள்ள ஆய்வகம் ஒன்றிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன், மீன் வியாபாரிகளிடம், மீனைப் பதப்படுத்தும் முறையைக் குறித்தும் கேட்டறிந்தனர். இதுகுறித்து மீன் வியாபாரி தி.செந்தில் கூறுகையில், ” அதிகாரிகள் வந்து சோதனையிட்டனர். பொதுவாக, நாங்கள் தினசரி பிடிக்கப்படும் மீன்களை அன்றைக்கே பனிக்கட்டி வைத்துக் கொண்டு வருவதால், எந்த பிரச்சினையும் இல்லை ” என்றார்.