இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிக்கக் கேட்டு மீனவர்கள் வேலை நிறுத்தம்.

Forums Communities Fishermen இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிக்கக் கேட்டு மீனவர்கள் வேலை நிறுத்தம்.

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #6851
  Inmathi Staff
  Moderator

  ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை தொடர்ந்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, விசைப்படகுகள் சங்கத்தலைவர் எம்ரிட் கூறுகையில்,” இலங்கை அரசு தொடர்ச்சியாக வேண்டுமென்ற மீனவர்களை பழிவாங்குகிறது. புதிய சட்டத்தைக் கொண்டு வந்து தமிழக மீனவர்களை இரண்டாண்டுகள் வரை ஜெயிலில் தள்ளவும் கட்ட முடியாத தொகையை அபராதமாகவும் விதிக்க முயல்கிறது. ஆகவே, மத்திய அரசு உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே இலங்கை கடற்படையால் 170 க்கும் மேற்பட்ட படகுகள் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்காமல் உள்ளது. அவற்றை ஆய்வு செய்து பார்த்த போது, அவற்றால் எந்த பயனும் இனி ஏற்படப்போவதில்லை என தெரியவருகிறது. எனவே, அந்த படகுகளுக்கு அரசு இழப்பீடும் தர வேண்டும் எனக் கேட்டு காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This