காவிரியில் நீர் திறந்துவிட கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவு

Forums Inmathi News காவிரியில் நீர் திறந்துவிட கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #6850

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளன. அதனையடுத்து கபினி அணியில் இருந்து காவிரியில் நீர் திறந்து விட கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.

    கடந்த ஜூலை 2ஆம் தேதி டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தமிழகத்துக்கு கர்நாடக அரசு 31 டி.எம்.சி நீரை திறந்துவிட வேண்டும் என கூறியிருந்தது. இதற்கு கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து வழக்குத் தொடருவதாகக் கூறியது. இந்த நிலையில் கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கர்நாடகத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் முழு அளவை எட்டும் நிலையில் உள்ளன. அதனைத் தொடர்ந்து தமிழகத்துக்கு நீரை திறந்துவிட கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.

    தற்போது விநாடிக்கு 35,000 கன அடிநீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் 38,000 கன அடி நீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நீர்வரத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரத்தில் மேட்டூர் அணையில் 63.8 அடியளவு  நீர்மட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This