நெல் பயிரில் களை எடுக்கும் வாத்துகள்

Forums Communities Farmers நெல் பயிரில் களை எடுக்கும் வாத்துகள்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #6835

    நெல் பயிர் என்றாலே நாற்றங்கால் அமைக்கும்போதும், பயிரை நட்டு  நீர்பாய்ச்சி வளர்க்கும் போதும் பெரிய பிரச்சனை களை தான். தற்போது வேளாண் தொழிலில் கூலிக்கு ஆள் கிடைப்பது அரிதாகி வருவதால் களை எடுப்பது ஒவ்வொரு விவசாயிக்கும்  சவாலான விஷயமாக மாறிவருகிறது.

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஒரு விவசாயி களை எடுக்க வாத்துகளை வளர்க்கிறார் என்பது ஆச்சர்யம்! நீர் தேங்கியிருக்கும்  நாற்றங்காலில் வளரும் களையை எடுக்க ஒரு ஏக்கரில் 4-5 வாத்து குஞ்சுகளை விட்டு விடுகிறார். அக்குஞ்சுகள் களையையும்   தீமை செய்யும் பூச்சிகளையும் உண்கின்றன.   அதேபோல் நீர் தேங்கியிருக்கும்  வயலில் வாத்துகள் களையை சரியாக கண்டுபிடித்து பிடுங்கிவிடுகின்றன. இதனால் ஆட்கூலி மிச்சமாவது ஒருபுறம். மற்றொரு புறம் வாத்து வளர்ப்பால் கூடுதல் வருமானம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். நம் ஊரில் முயற்சி செய்து பார்க்கலாமே விவசாயிகளே.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This