Forums › Communities › Farmers › மாடி தோட்டம் அமைக்கும் முன் செய்ய வேண்டியது ? part4
- This topic has 0 replies, 1 voice, and was last updated 2 years, 6 months ago by
madhu balan.
-
AuthorPosts
-
July 10, 2018 at 8:37 am #6827
madhu balan
Participantசெடி,கொடி,மரம் வளர்ப்பவர்களுக்கான டிப்ஸ்
1. செடிகளுக்கு விடப்படும் தண்ணீர் மிகவும் உப்பு தண்ணீராக இருக்க கூடாது. 2. தொட்டிகளில் செடியை வளர்ப்பவர்கள் குறிப்பாக ஒன்று முதல் ஒன்றரை அடி ஆழமன சிமென்டு தொடிகளை பயன் படுத்தினால் திரும்ப திரும்ப செடிகளை நடுவதற்கு வசதியாக இருக்கும். தொட்டிகளில் செம்மண், மணல், கார்டன்ப்ளூம் உரத்தை கலக்கவும். 3. செடிகளுக்கு காலையிலும், மாலையிலும் தண்ணீர் விடவும். இயற்கை உரங்களைப் போடு வளர்க்கப்படும் செடிகளில் வளரும் காய்கள், சுவையாக இருப்பதோடு உடல் எஅலத்திற்கும் மிக நல்லவை6. தக்காளி, வெண்டை, பசை மிளகாய் போன்ற காய்கறி செடிகளுக்கு டீத்தூள், முட்டை ஓடு,மக்கிய காய்கறி கழிவுகளை உரமாக போடலாம் 7. அவரை கொடி பூக்காமல் இருந்தால் இலைகலை இடையிடையே உருவி எடுத்து விட்டால்பூக்கள் பூத்து காய்கள் காய்க்கத்தொடங்கும்
. 8. கருவேப்பிலை செடி காய்ந்து விட்டால் அந்த இடத்தை பறித்து விட்டால் உடனே துளி விட்டு படர்ந்து வளரும்
9. எழுமிச்சை மரத்திற்கு மீன் கழிவுகளை போட்டால் செழித்து வளரும் காயும் காய்த்து விடும்.
10.வீட்டுத் தோட்டத்தில் கொய்யா, மா, சப்போட்டா இருந்தால் முதல் இரண்டு வருடம் பூக்கும் பூக்களை உருவி விட்டல் பின்னல் நன்றக காய்க்கும்
23.வீட்டிலிருந்து கிடைக்கும் கழிவுகளில் இருந்து உரத் தயாரிப்பு மற்றும் பூச்சிவிரட்டி எப்படி?
”ஓர் அடி அகலம் மற்றும் உயரமுள்ள தொட்டியில், சமைக்கப்படாத கழிவுகளைப் போட்டு, புளித்தத் தயிரை தண்ணீரில் கலந்து தெளித்தால்… கழிவுகள் மட்க ஆரம்பித்து, ஒரு மாதத்தில் எரு தயாராகி விடும். பிளாஸ்டிக் பொருட்கள், அசைவக் கழிவுகளை பயன்படுத்தக் கூடாது. மரங்களிருந்து விழும் இலை மற்றும் தழைகள், பூஜைக்குப் பயன்படுத்திய பூக்கள்… என வீட்டில் கிடைக்கும் பெரும்பாலான கழிவுகளையும்
லாமபயன்ப. ஓர் அடி ஆழம் மற்றும் அகலத்துக்கு குழியைத் தோண்டி, கிடைக்கும் மண்ணை, குழியைச் சுற்றி அணைபோல் கட்ட வேண்டும். பிறகு, குழிக்குள் கழிவுகளைப் போடவேண்டும். குழியைச் சுற்றி இருக்கும் மண் மீது வெண்டை, கத்திரி, தக்காளி போன்றவற்றை நடலாம். குழியில் கழிவுகளைக் கொட்டி புளித்தத் தயிரைத் தெளித்து வந்தால் போதும். அந்த ஊட்டத்தை எடுத்துக் கொண்டு, செடிகள் வளர்ந்து காய்கள் கிடைத்துவிடும். தினமும் கிடைக்கும் கழிவுகளின் அளவுக்கு ஏற்ப, ஒன்றுக்கும் மேற்பட்ட குழிகளை அமைத்துக் கொள்ளலாம்.
ஒரு பாத்திரத்தில் ஒரு கிலோ அளவுக்கு வாழை மற்றும் திராட்சை போன்ற பழங்களின் கழிவுகள் மற்றும் ஒரு கிலோ வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கி, 5 லிட்டர் தண்ணீரை ஊற்றி பதினைந்து நாட்கள் வைத்துவிட வேண்டும். பிறகு, அருமையான டானிக் கிடைக்கும். இதைச் செடிகளுக்குத் தெளித்தால், அருமையாக வளரும்.
ஒரு சிறிய வீட்டின் மாடியில் 30 செடிகள் வரையில் வளர்க்க முடியும்.
Growbagல் முழுக்க முழுக்க கோகோபிட் மட்டும் போட்டு, சிறிது இயற்கை உரம் சேர்த்து பயிரிடலாம். அல்லது செம்மண் 2 பங்கு, மணல் 1 பங்கு, மக்கு உரம் 1 பங்கு கலந்து பயிர் செய்யலாம். மாடியில ் அமைக்கும்தொட்டத்திற்கு cocopeat தான் நல்லது. இதில் அதிக எடை இருக்காது. அதேபோ growbagலிருந்து வெளியேறும் நீர் தளத்தை பாதிக்காமல் இருக்க geotextile material பயன்படுத்தலாம்
எனது மாடி தோட்டத்தை பார்க்க ஆசையாக இருந்தால் கண்டிப்பாக தயக்கம் இல்லாமல் வரவும். நன்றி மது பாலன். 9751506521.
-
AuthorPosts
- You must be logged in to reply to this topic.