லோக்ஆயுக்தா மசோதா தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு, விவாதம் நடைபெற்றது.
அப்போது, இது அதிகாரமற்ற அமைப்பாகவே அமைக்கப்பட்டுள்ளதாக கூறி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்., உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இருப்பினும் குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
அவையில் இருந்து வெளியே வந்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுகையில், சுப்ரீம் கோர்ட் விதித்த கெடு இன்றுடன் முடிவதால் அவசர அவசரமாக லோக்ஆயுக்தா மசோதா நிறைவேற்றப்படுகிறது. அரசு ஒப்பந்தங்கள், டெண்டர்கள், நியமனங்கள் குறித்த புகார்களை விசாரிக்க மசோதாவில் வழிவகை இல்லை.
மசோதாவில் திருத்தங்கள் செய்து, தேர்வு குழுவுக்கு அனுப்பி, பின்னர் தீர்வு காண வேண்டும் என திமுக வலியுறுத்தியது. லோக் ஆயுக்தா மசோதா சட்டசபையில் கொண்டு வரப்பட்டதற்கு திமுக சார்பில் வரவேற்று மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய சூழலில் அது அதிகாரம் இல்லாத அமைப்பாக உருவாகும் என்பதாலேயே எதிர்க்கிறோம் என்றார்.