மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு

Forums Inmathi News மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #6657
  Kalyanaraman M
  Keymaster

  வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், சில இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கோவை, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This