கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடப்பதாக திமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை ஜூலை 23 நடைபெற உள்ளது. இறுதி விசாரணை முடிந்து, அன்றே தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.