மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை வாங்க தயாராக இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதிலளித்துள்ளது. மலேசியாவில் இருந்து 54,000 டன் மணல் இறக்குமதி செய்யப்பட்டு, தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ளது. மணல் இறக்குமதியாளருடன் நாளை மறுநாள் விலை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.