கோர்ட் விசாரணையை நேரடி ஒளிபரப்ப உத்தரவு

Forums Inmathi News கோர்ட் விசாரணையை நேரடி ஒளிபரப்ப உத்தரவு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #6654
    Kalyanaraman M
    Keymaster

    சுப்ரீம் கோர்ட்டில் நடக்கும் வழக்கு விசாரணைகள் இனி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

    சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் மற்றும் விசாரணை நீதிமன்றங்களில் நடக்கும் வழக்கு விசாரணைகளை இனி நேரடி ஒளிபரப்பு செய்யலாம். இதன் மூலம் கிராமப்புற மக்களும் வழக்கு விசாரணை குறித்து அறிந்து கொள்ள முடியும். கோர்ட் செயல்பாடுகள் மற்றும் வழக்கு விசாரணைகள் குறித்து மக்கள் அனைவரும் தெரிந்து கொள்வதற்கு நேரடி ஒளிபரப்பு முக்கியம் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த அறிவிப்புக்கு மத்திய அரசும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து நேரடி ஒளிபரப்பிற்கான வழிகாட்டு நெரிமுறைகளை ஜூலை 23 ம் தேதி தாக்கல் செய்ய அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலை சுப்ரீம் கோர்ட் கேட்டுக் கொண்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This