புகைப்பிடித்தை ஊக்குவிக்கும் விதத்தில் போஸ்டர் வெளியிட்ட சர்கார் திரைப்பட நிறுவனம், ராயப்பேட்டை அரசு புற்றுநோய் மருத்துவமனைக்கு 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் “சர்கார்“ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், நடிகர் விஜய் புகைப்பிடிப்பதை போல் போஸ் கொடுத்ததற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின.
இந்நிலையில், சர்கார் பட போஸ்டர் புகைப்பிடிப்பதை ஊக்குவிக்கும் விதத்தில் உள்ளதாகவும், இதனால், அப்படத்தின் நிறுவனம் ராயப்பேட்டை புற்றுநோய் மருத்துவமனைக்கு 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறில் அலெக்சாண்டர் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, இம்மனு குறித்து பதிலளிக்க நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.