சென்னை பெட்ரோல் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவருவதால் எட்டு மாவட்டங்களுக்கு பெட்ரோல் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
வாடகையை உயர்த்தித் தரக் கோரியும், டெண்டரில் இடஒதுக்கீட்டை முறையாக செயல்படுத்தக் கோரியும் பெட்ரோல் டேங்கர் லாரி உரிமையாளர்கள் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் சென்னையில் உள்ள இந்துஸ்தான், பாரத் உள்ளிட்ட பெட்ரோலிய நிறுவனங்களில் இருந்து பெட்ரோல் எடுத்துச் செல்லும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த வேலை நிறுத்தம் நீடித்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர் உள்பட 8 மாவட்டங்களில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.