Forums › Communities › Fishermen › பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க புதுவை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தல்
- This topic has 0 replies, 1 voice, and was last updated 2 years, 6 months ago by
Inmathi Staff.
-
AuthorPosts
-
July 9, 2018 at 1:09 pm #6634
Inmathi Staff
Moderatorமீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற பிளாஸ்டிக் உபயோகத்தை புதுச்சேரி மாநிலத்திலும் தடை செய்ய வேண்டும் என்ற புதுச்சேரி அரசுக்கு தேசிய மீனவர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
தேசிய மீனவர் பேரவை தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ திரு.மா.இளங்கோ. இன்று காலை 9 மணியளவில் புதுச்சேரி மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.எம்.கந்தசாமி அவர்களை சட்ட சபையில் உள்ள அவருடைய அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
உலகச்சுற்றுசூழல் தினம் கடந்த 05 -06 -2018 கடைபிடிக்கப்பட்டது.உலக பெருங்கடல் தினம் கடந்த 08 -06 -2018 கொண்டாடப்பட்டது
இந்த 2018 ஆம் ஆண்டுக்கான உலகபெருங்கடல் தின கருப்பொருளாக ‘அழியாதிருக்கின்ற மாசுபடுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை தடுத்து சுகாதாரமான பெருங்கடல் காண வழி வகைகள ஊக்குவிப்போம்” என்ற செயல் திட்டம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.
உலக சுற்றுசூழல் தினத்தின் 2018 ம் ஆண்டுக்கான சர்வதேச கோஷம் ”பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுசூழல் பாதகங்களை வீழ்த்துவோம்”, என்பதாகும்.
உலகம் முழுவதும் பயன்படுத்தக்கூடிய அழியாத தன்மையுள்ள, மாசு உருவாக்கக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகளில் 80 சதவீதம் கடல்களில்தான் கொட்டப்படுகிறது.
உலகம் முழுவதும் கடல்களை மாசுபடுத்தும் 80 சதவீத காரணிகள் பிளாஸ்டிக் கழிவுகளாகத்தான் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்பட்டு கடலில் வாழும் மீன்கள், அரியவகை உயிரினங்கள் ஆகியவற்றின் வாழ்வியலில் பேரழிவை ஏற்படுத்துகின்றது .
ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான திமிங்கிலம் போன்ற பாலூட்டி இனங்களையும், கடல்பறவைகளையும் உயிரிழக்க செய்கின்றது. கடந்த வாரம் தாய்லாந்து நாட்டில் உயிரிழந்த நிலையில் ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து 8 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டதை ஊடகங்கள் வாயிலாக நாம் காண நேர்ந்தது.
பிளாஸ்டிக் கழிவுகளை மீன்கள் உண்பதும் அந்த மீன்களை மனித இனம் உண்பதும் நடைமுறையாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் கடல் சுற்றுச்சுழல் மிகப்பெரும் அளவில் பாழாகி வருகிறது.
மனிதன், மிருகங்கள், பறவைகள், ஊர்வன தாவரங்கள் போன்ற அனைத்து தரப்பு வாழ்வியல் சுழற்சியில் மிக முக்கிய பங்கு வகிப்பது கடல், பெருங்கடல் மற்றும் நீர் நிலைகளாகும்.
அந்த சுழற்சியில் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டு வரும் சீர்கேடுகள் எதிர்கால சந்ததியினரை வாழ விடாமல் பேரழிவை ஏற்படுத்தப்படக்கூடிய அபாயம் உள்ளது.
தற்போது கடலில் மீன்கள் கிடைக்காமல் மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.
சமீபத்தில் ஆய்வு ஒன்றின்போது இந்தியபெருங்கடலின் ஆழப்பகுதியில் மிக துல்லிய பல்துலக்கும் பிரஷின் மிகச்சிறிய துகள்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்
இதனால் மீனவர்கள் வருவாயின்றி கவலைப்பட ஆரம்பித்துள்ளனர் வங்கக்கடல், அரபிக்கடல், இந்தியபெருங்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கக்க செல்லும் இந்திய மீனவர்கள், இந்திய உள்நாட்டு நீர்நிலைகளில் மீன்பிடிக்கும் பாரம்பரிய மீனவர்கள் ஆகியோரின் வாழ்வியல் துயரம் தொடர்கதையாகி வருகிறது.
நாட்டுமக்களுக்கு மலிவு விலையில் கிடைக்கும் புரதச்சத்தான மீன் உணவு கிடைக்காமல் போகக்கூடிய அபாய அறிகுறிகள் தென்படுகிறது. நாடடு மக்களுக்கு துணை உணவுக்கான பஞ்சம் ஏற்படக்கூடும்.
இதனால் தான் ஐக்கிய நாடுகள் சபையின் பெருங்கடல்கள் விவகாரத்திற்கான பிரிவும், கடல் சட்டத்திற்கான துறையும் கடந்த 2014ம் ஆண்டில் உருவாக்கிய உலக பெருங்கடல்கள் தின இந்த ஆண்டுக்கான கோஷமாக ”கடல்களை சுத்தப்படுத்த உதவிடுங்கள்”, என்று அறைகூவல் விடுத்துள்ளது. ”பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்த்திடுவோம், மறு சுழற்சிக்கான பிளாஸ்டிக்கை மட்டும் பயன்படுத்தவோம்”’. என்று உலகளவில் கோஷம் எழுப்பப்பட்டுள்ளது.
எனவே இந்திய நாட்டின் மத்திய, மாநில, அரசுகளை, உள்ளாட்சி அமைப்புகளை இது குறித்து வலியுறுத்தவும் மக்களிடம் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அடுத்த ஓராண்டு காலத்திற்கு இயக்கங்களை மேற்கொள்வதென தேசிய மீனவர் பேரவை முடிவு செய்துள்ளது.
தேசிய மீனவர் பேரவையின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கேடுவிளைவிக்கும் பிளாஸ்டிக் உற்பத்தியையும், உபயோகத்தையும் மத்திய மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும். தமிழகத்தை போல் அனைத்து மாநிலங்களும் தடை அமலுக்கு வரும் தேதியை குறிப்பிட்டு அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
மகாராஷ்டிரா மாநிலம் பிளாஸ்டிக் உபயோகிக்க தடை விதித்துவிட்டது. உத்தரபிரதேசம் ஜூலை 15 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் உபயோகிப்பதற்கு தடை விதித்து ஆணை வெளியிட்டுள்ளது
புதுச்சேரி சுற்றுசூழல் அமைச்சர் எடுத்து வரும் நடவடிக்கையை பாராட்டுகின்றோம். புதுச்சேரி மாநிலத்திலும் தடை அமலுக்கு வரும் தேதியை குறிப்பிட்டு அரசாணை பிறப்பிக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம். நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரின் போது அதற்கான அறிவிப்பு வெளியிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
மேற்கண்டுள்ளவாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
AuthorPosts
- You must be logged in to reply to this topic.