கபினி அணை நிரம்பி வருவதாலும் தொடர்ந்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதாலும் கர்நாடகா அரசு, காவிரியில் நீரைத் திறந்து விடுகிறது. அதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த வாரம் 58 அடியாக இருந்து, பிறகு 60 அடி உயர்ந்தது.
இந்நிலையில் ஜூலை 2ஆம் தேதி டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்துக்கு ஜூலை மாதத் தவணையாக 31 டிஎம்சி நீரை திறந்து விட வேண்டும் என கூறியிருந்தனர்.
கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணைய முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர ஆலோசனை செய்தது. இருந்த போதும் அங்கு தொடர்ந்து மழை பெய்து பெய்து வருவதால் 28,000 கன அடிநீரை திறந்துவிட்டுள்ளது. அதனால் தற்போது மேட்டூர் அணையில் 63.68 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி கொள்ளளவு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கனாடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர் டெல்டா பகுதியில் குறுவைக்கு உதவி செய்யுமா என்பது கேள்விக்குறியே.