நாகை மாவட்டக் கடலோர கிராமங்களில் கடும் குடி நீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நாகை மாவட்டம் கொள்ளிடத்தை அடுத்த தாண்டவன் குளம், புதுப்பட்டினம், பழையபாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் 20 க்கும் மேற்பட்ட கடலோர கிராமங்கள் அமைந்துள்ளன. கடந்த சில காலமாக, இங்கு மழை பெய்யாத நிலையில், தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்த வண்ணமிருந்தது. இதனையடுத்து, அதிகாரிகள் புவியியல் வல்லுனர்களை அழைத்து நிலத்தடி நீரின் இருப்பை ஆய்வு செய்துள்ளனர். அப்போது பல இடங்களில் 1000 அடியில் கூட நீர் இல்லாமலிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து, நாகையிலிருந்து மோகன் தாஸ் கூறுகையில் ” இப்போது, தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகிறோம். எங்களுக்கு கிடைக்கும் நிலத்தடி நீரின் அளவு மிகக் குறைவாகவே இருப்பதை அறிகிறோம். நாகை கடலோர கிராமங்கள் முன்பிருந்ததை விட வேகமாக மாறியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். கொள்ளிடம் கூட்டுக் குடி நீர் திட்டம் மூலம் கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு தற்போது சமாளித்து வருகிறோம். மழை பெய்தால் மட்டுமே நிலத்தடி நீர் உயர்ந்து தண்ணீர் கிடைக்கும் என நம்புகிறோம். ” எனக் கூறினார்.