கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மேலும் 4 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தை அடுத்த மண்டபத்தை சேர்ந்த சதீஷ் என்பவருக்கு சொந்தமான TN 11 MM 292 என்ற எண்ணுடைய படகில் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இன்று காலையில் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதுடன் அவர்கள் படகினையும் பறிமுதல் செய்ததாக ராமேஸ்வரத்திலிருந்து நிரபராதி மீனவர்களின் விடுதலைக்கான கூட்டமைப்பின் நிறுவனர் யு. அருளானந்தம் கூறுகிறார். முன்னதாக, கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததுடன், அவர்கள் படகுகளையும் பறிமுதல் செய்தது குற்ப்பிடத்தக்கது.