திருவாடானை அருகே உள்ள மச்சூர் கிராமத்தில் தனியார் கருவாடு அரைக்கும் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் இந்த ஆலை செயல்படுவதால் கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் தொற்று நோய் பரவுவதாகவும் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். அதைத்தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆலை மூடப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக இந்த கருவாடு அரைக்கும் ஆலை மீண்டுகர்வ்ம் செயல்படத் தொடங்கிவிட்டது. இதனைத் தொடர்ந்து, வட்டாணம் கொடிப்பங்கு, பனஞ்சாவயல் ஆகிய நான்கு ஊராட்சிகளை சேர்ந்த கிராம பொதுமக்கள் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து திருவாடானை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தாசில்தார் சாந்தி கிராம பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நேரடியாக வந்து ஆலையை பார்வையிடுவதாகவும், அதன் பிறகு ஆலையை மூட அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றதாக திருவாடானையை சேர்ந்த சக்திவேல் கூறுகிறார்.