Forums › Communities › Farmers › மாடி தோட்டம் அமைக்கும் முன் செய்ய வேண்டியது ? part-2
- This topic has 0 replies, 1 voice, and was last updated 2 years, 6 months ago by
madhu balan.
-
AuthorPosts
-
July 8, 2018 at 10:01 am #6584
madhu balan
Participant§ 6.
தேவையான பொருட்கள் சேகரித்து வைத்து கொள்ளவும்.
1 . GROW BAGS or thotti or செடி பை ,.மணல் ..தென்னை நார் கழிவு மககியது .. மண் புழு உரம் , செம்மண் , சுடோமொனஸ் ,டி.விரிடி , உயிர் உரங்கள் வேப்பம் புன்ன்னக்கு, பூவாளி, தெளிப்பான் , பஞ்சகவ்யா.. 2. அடி குச்சிகள் , சரளை கல் பிளாஸ்டிக் கயிறு , கத்தரிக்கோல் வேப்ப எண்ணை (Azadiractin)
2 நாற்றுகள்- தக்காளி மிளகாய் கத்தரி முதலியவை , கீரை , கொடி வகை விதைகள் , பாகல், சுரை, பூசணி, பீர்க்கன். மலர் செடிகள் மல்லிகை, செம்பருத்தி, அரளி . ரோஜா ,
3 சொட்டு நீர் பாசனம் அமைக்க வசதி மற்றும் உபகரணம்
4.தண்ணீர் உள்ளே இறங்குவதை தடுக்க தரையில் வெள்ளை நிற white water proof paint தரையில் அடிக்கவும்.
5.செடி பை வைக்கும் முன் சிறு சரளை கல் சிறுது கொட்டி அதன் மேல் வைப்பதால் நன்மை உண்டு.
8.. டேரஸ் கார்டனில் செடிகள் வைக்க எப்படி ஆரம்பிப்பது?
அது மிக மிக எளிது… 1) உங்களிடம் உள்ள ஒரு நல்ல தொட்டியோ, பானையோ, பால் போடும் கிரேடுகள் (முடிந்த அளவு புதியதை தேடாமல் பழையவற்றை மறு உபயோகம் செய்தால் குப்பைகளை குறைத்தும் கொள்ளலாம்) எடுத்துகொள்ளவும். அதில் அதிக படியான நீர் செல்ல ஒரு துவாரத்தை அமைத்து கொள்ளவும்
. 2) இதில் மண், மக்கிய குப்பை, மணல் (அ) தேங்காய் நார் இவற்றுடன் மண் புழு உரம் அனைத்தையும் சம அளவில் எடுத்து கொள்ளவும். 3) துவாரத்தை அடைத்து கொண்டு இந்த கலவையை நிரப்பியவுடன் தண்ணீர் ஊற்றி மண் மற்றும் கலவை வெளியேராததை உறுதி செய்து கொள்ளவும். இப்போது கலவையை ஈரமாக்கி உங்களின் பிரியமான உணவின் விதையோ, செடியோ நட்டு வைத்து அது நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் வளருவதை கண்டு களியுங்கள்.
9.என்ன விதமான தொட்டிகள் உபயோக படுத்தலாம்?
இந்த அளவு, வடிவம், பொருள் என்று ஒன்றுமே கிடையாது. அதனால் பிளாஸ்டிக், மண்பானை, உலோகம், செராமிக் எந்த பொருளில் செய்திருந்தாலும் பிரச்சனை இல்லை. நீங்கள் இயற்கையை பேணும் ஆவல் உடையவரா? இன்னும் சிறப்பாக உபயோகபடுத்தி தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் (கோலா, தண்ணீர்), பேக்கரிகளில் கொடுக்கும் தெர்மோகோல் டப்பாக்கள்,சாக்ஸ், தேங்காய் ஓடுகள், உடைந்த வாளி, நசுங்கிய வீட்டு பொருள்கள், இதற்கு மேலே உங்களின் கற்பனைக்கே!!
10. என்ன என்ன செடிகள் வைக்கலாம்?
நமது சமையலுக்கு தேவையானவற்றிலிருந்து துவங்கலாம். தனியா, வெந்தயம், கடலை, மிளகாய் இவை வெறும் விதைகளிலேயே சீக்கிரம் வளர்ந்து நம்மை பெருமை கொள்ள செய்யும். ஓரளவு பழகியவுடன் சிறிது நம்பிக்கை வந்தவுடன் நமக்கு பிடித்த காய்கறி செடிகள் (கத்திரி, எலுமிச்சை,முறுங்கை, வெண்டை, தக்காளி, ) பழங்கள் (வாழை, மாதுளை) போன்றவற்றை பயிர் செய்யலாம். இந்த காய்கள் வருடத்தில் எல்லா நாட்களிலும் விளையும் என்பது கூடுதல் நன்மை.
11.. எவ்வளவு காய்கறி/பழங்கள் என் தோட்டத்திலிருந்து கிடைக்கும்?
1X1 மாடியில் இருந்து ஒரு வருடத்திற்கு சுமார் ஆறு வகை காய்கள் 25 முதல் 50 கிலோவரை பெறலாம். விவசாய அனுபவம் இதற்கு அவசியமா? இல்லை…உங்களுக்கு அவசியமாக இருக்க வேண்டியது ஆர்வம் மட்டுமே!!! கைகளை கழுவ அலுப்பும் படாமல் இருக்க வேண்டும்.
11. .இதனால் என்ன பயன்?
1) நமது நேரத்தை பயனுள்ளதாக ஆக்கும் அன்பளிப்புடன்… 2) நமது வீட்டின் சூட்டை ஆறு முதல் எட்டு டிகிரி குறைப்பதால் இயற்கை ஏசியாக செயல்படுகிறது. 3) கட்டிடத்தை வெயில் மற்றும் குளிர் இரண்டிலிருந்தும் தனிபடுத்தி காக்கின்றது. 4) கெமிக்கல் இல்லாத சத்தான, புதிய உணவை தருகின்றது. 5) நமது உடலுக்கு நல்ல பயிற்சியாக அமைந்து வலுவாக்கின்றது. 6) சுத்தமான காற்றை தருகின்றது. 7) சத்தத்தால் ஏற்படும் பாதிப்பையும் குறைத்து அழிந்து போகும் குருவிகள் இனத்திற்கு வீடு கொடுத்து நமக்கு புண்ணியமும் தருகின்றது. இதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படும்?
புதிதாக தொடங்க ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் தேவை படலாம். செடிகள் நட்டு வளர ஆரம்பிக்க ஒரு மாதம் பிடிக்கும். டரஸ் கார்டனை பராமரிக்க என்ன செய்ய வேண்டும்? நமது தோட்டத்தில் செடிகள் வளர ஆரம்பித்தவுடன் ஒரு நாளுக்கு ஒரு மனி நேரம் செலவிட்டாலே போதும். அதுவும் அதிலேயே உடற்பயிற்சி, சுவாச பயிற்சி(சுத்தமான காற்றுடன்) எல்லாம் அடங்கி விடும்
-
AuthorPosts
- You must be logged in to reply to this topic.