2019ல் ஒருங்கிணைந்த தேர்தலை எதிர்க்கிறோம், 2024ல் போதுமான அவகாசத்துடன் நடத்துவதை வரவேற்கிறோம் என்று சட்ட ஆணையத்தில் அதிமுக சார்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து தெரிவித்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் 5 ஆண்டுகள் நிறையடைய வேண்டுமென்றும், குஜராத், கர்நாடகாவில் இன்னும் ஓர் ஆண்டு கூட நிறைவடையத நிலையில் 2019ல் ஒருங்கினைந்த தேர்தல் நடத்துவது சரியல்ல என்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தனர்.