கடலில் பிளாஸ்டிக் உபயோகத்தை தடைசெய்ய தேசிய மீனவர் பேரவை கோரிக்கை!

Forums Communities Fishermen கடலில் பிளாஸ்டிக் உபயோகத்தை தடைசெய்ய தேசிய மீனவர் பேரவை கோரிக்கை!

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #6540
    Nandha Kumaran
    Participant

    உலகம் முழுவதும் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக்கின்  80% பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்படுவதால் கடல்பரப்பு உயிரினங்கள், மீன்கள், மற்றும் மனிதகுலத்திற்கு ஏற்படும் அபாயங்களை தவிர்க்க மோசமான பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் உபயோகத்தை தடுக்க மத்திய மாநில அரசுகள் தடை விதித்து திட்டவட்டமான தேதியுடன் அரசாணை    பிறப்பிக்க வேண்டும் என்று   தேசிய மீனவர் பேரவை கோரிக்கை  விடுத்துள்ளது.

    தேசிய மீனவர்  பேரவை (National Fisherfolk Forum)   தலைவர்  முன்னாள் எம்.எல்.ஏவான மா. இளங்கோ புதுச்சேரியின் தேசிய மீனவர் பேரவை தலைமை அலுவலகத்தில் இன்று காலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    உலகச்சுற்றுசூழல் தினம் கடந்த 05 -06 -2018 கடைபிடிக்கப்பட்டது, அது போன்றே உலக பெருங்கடல் தினம் கடந்த 08 -06 -2018 கொண்டாடப்பட்டது.

    இந்த 2018 ஆம் ஆண்டுக்கான உலகபெருங்கடல் தின (World Ocean Day) கருப்பொருளாக “அழியாதிருக்கின்ற  மாசுபடுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை தடுத்து சுகாதாரமான பெருங்கடல் காண வழி வகைகள ஊக்குவிப்போம்” என்ற செயல் திட்டம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.

    உலக சுற்றுசூழல் தினத்தின் 2018 ௮ம் ஆண்டுக்கான சர்வதேச கோஷம் “பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுசூழல் பாதகங்களை வீழ்த்துவோம்”, என்பதாகும்.

    உலகம் முழுவதும் பயன்படுத்தக்கூடிய அழியாத தன்மையுள்ள, மாசு உருவாக்கக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகளில் 80 சதவீதம் கடல்களில்தான் கொட்டப்படுகிறது.

    உலகம் முழுவதும் கடல்களை மாசுபடுத்தும்   80 சதவீத காரணிகள் பிளாஸ்டிக் கழிவுகளாகத்தான் உள்ளன.  ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்பட்டு கடலில் வாழும் மீன்கள், அரியவகை உயிரினங்கள் ஆகியவற்றின் வாழ்வியலில் பேரழிவை ஏற்படுத்துகின்றது .

    ஒவ்வொரு ஆண்டும்  லட்சக்கணக்கான திமிங்கிலம் போன்ற பாலூட்டி இனங்களையும், கடல்பறவைகளையும் உயிரிழக்க செய்கின்றது.  கடந்த வாரம் தாய்லாந்து நாட்டில்  உயிரிழந்த நிலையில் ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து 8 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டதை ஊடகங்கள் வாயிலாக நாம் காண நேர்த்தது.

    பிளாஸ்டிக் கழிவுகளை மீன்கள் உண்பதும் அந்த மீன்களை மனித இனம் உண்பதும்  நடைமுறையாகிவிட்டது.  ஒவ்வொரு நாளும் கடல் சுற்றுச்சுழல் மிகப்பெரும் அளவில் பாழாகி வருகிறது.

    மனிதன், மிருகங்கள், பறவைகள், ஊர்வன தாவரங்கள் போன்ற அனைத்து தரப்பு வாழ்வியல் சுழற்சியில் மிக முக்கிய பங்கு வகிப்பது கடல், பெருங்கடல் மற்றும் நீர் நிலைகளாகும்.

    அந்த சுழற்சியில் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டு வரும் சீர்கேடுகள் எதிர்கால சந்ததியினரை வாழ விடாமல் பேரழிவை ஏற்படுத்தப்படக்கூடிய அபாயம் உள்ளது.

    தற்போது கடலில் மீன்கள் கிடைக்காமல் மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

    சமீபத்தில் ஆய்வு  ஒன்றின்போது இந்தியபெருங்கடலின் ஆழப்பகுதியில் மிக துல்லிய பல்துலக்கும் பிரஷின் மிகச்சிறிய துகள்களை  ஆய்வாளர்கள்  கண்டுபிடித்துள்ளனர்

    இதனால் மீனவர்கள் வருவாயின்றி கவலைப்பட ஆரம்பித்துள்ளனர் வங்கக்கடல், அரபிக்கடல், இந்தியபெருங்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கக்க செல்லும்  இந்திய மீனவர்கள், இந்திய உள்நாட்டு நீர்நிலைகளில் மீன்பிடிக்கும் பாரம்பரிய மீனவர்கள் ஆகியோரின்  வாழ்வியல் துயரம் தொடர்கதையாகி வருகிறது.

    நாட்டுமக்களுக்கு  மலிவு விலையில் கிடைக்கும் புரதச்சத்தான மீன் உணவு கிடைக்காமல் போகக்கூடிய அபாய அறிகுறிகள் தென்படுகிறது.  நாடடு மக்களுக்கு துணை உணவுக்கான  பஞ்சம் ஏற்படக்கூடும்.

     

    இதனால் தான் ஐக்கிய நாடுகள் சபையின் பெருங்கடல்கள் விவகாரத்திற்கான பிரிவும், கடல் சட்டத்திற்கான துறையும் கடந்த 2014ம் ஆண்டில் உருவாக்கிய உலக பெருங்கடல்கள் தின  (World Ocean day) இந்த ஆண்டுக்கான கோஷமாக “கடல்களை சுத்தப்படுத்த உதவிடுங்கள்”, என்று அறைகூவல் விடுத்துள்ளது.  “பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்த்திடுவோம், மறு சுழற்சிக்கான பிளாஸ்டிக்கை மட்டும் பயன்படுத்தவோம்”‘.  என்று உலகளவில் கோஷம் எழுப்பப்பட்டுள்ளது.

    எனவே இந்திய நாட்டின் மத்திய, மாநில, அரசுகளை, உள்ளாட்சி அமைப்புகளை இது குறித்து வலியுறுத்தவும் மக்களிடம் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அடுத்த ஓராண்டு காலத்திற்கு இயக்கங்களை மேற்கொள்வதென தேசிய மீனவர் பேரவை முடிவு செய்துள்ளது.

    தேசிய மீனவர் பேரவை (National Fisherfolk Forum) யின்  தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் உள்ள 13 கடற்கரை மாநிலங்கள் உள்ளிட்ட 36 மாநில அரசுகள், மத்திய அரசு, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் பொறுப்பாளர்களின் கவனத்தை ஈர்க்க நாடு முழுவதும் பேரணி, பொதுக்கூட்டம், மாநாடுகள், தெரு முனைப்பிரச்சாரம், மனுஅளித்தல் போன்றவற்றில் ஈடுபட வேண்டுமாய் அணைத்து மாநிலத்தில் இயங்கும்   தேசிய மீனவ பேரவையில் இணைந்துள்ள மீனவ அமைப்புகளை கேட்டுக்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.

    மேலும் நாட்டில் இயங்கும்,  பிற தேசிய, மாநில, மாவட்ட அளவிலான மீனவ அமைப்புகள், அனைத்து மாவட்ட மீனவ பஞ்சாயத்துகள், மீனவ கிராம பஞ்சாயத்துகள்,  அனைத்து அரசியல் கட்சிகள், சுற்றுசூழல் பாதுகாப்பு நிறுவனங்கள், அமைப்புகள்,சுற்றுசூழல் ஆர்வலர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் ஆகியோரும் இதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

     

    கேடுவிளைவிக்கும் பிளாஸ்டிக் உற்பத்தியையும், உபயோகத்தையும் மத்திய மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும்.  தமிழகத்தை போல் அனைத்து மாநிலங்களும் தடை அமலுக்கு வரும் தேதியை குறிப்பிட்டு அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

    மகாராஷ்டிரா மாநிலம் பிளாஸ்டிக் உபயோகிக்க தடை  விதித்துவிட்டது.   உத்தரபிரதேசம்  ஜூலை   15 ஆம்  தேதி முதல்   பிளாஸ்டிக் உபயோகிப்பதற்கு தடை விதித்து நேற்றைய தினம்  ஆணை  வெளியிட்டுள்ளது

    தமிழ் நாடு,  மகாராஷ்டிரா,    உத்தர பிரதேசம்  அரசுகளின்  முடிவை வரவேற்கின்றோம்.  புதுச்சேரி சுற்றுசூழல் அமைச்சர் எடுத்து வரும் நடவடிக்கையை பாராட்டுகின்றோம்.  புதுச்சேரி மாநிலத்திலும் தடை அமலுக்கு வரும் தேதியை குறிப்பிட்டு அரசாணை பிறப்பிக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்.   நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரின்  போது அதற்கான அறிவிப்பு   வெளியிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். எனக் கூறினார்.

     

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This