கடலூர் மாவட்ட கடலோர காவல்படையினர் கடல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னை, புதுச்சேரியில் நடைபெறும் விழாக்களில் பங்கேற்க வந்துள்ளார். நாளை (8ம் தேதி) நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்னையில் தங்கியுள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்ட கடல் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக கடலோர காவல்படையில் ஆய்வு செய்தனர்.சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் கடலோர காவல்படை போலீசார் படகில் நடுக்கடலில் மீன்படி பணியில் ஈடுபட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் கடற்கரையோர கிராமங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தனர். முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது இதுபோன்று கடல் பகுதியிலும் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம் என கடலோர காவல்படையினர் தெரிவித்தனர். கடலூர் அருகே நல்லவாடு மற்றும் சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை உள்ளிட்ட பகுதி வரை ஆய்வு நடத்தப்பட்டது என கடலோர காவல்படை அதிகாரிகள் கூறுகின்றனர்.