குமரியில் வலையின் கயிற்றில் சிக்கிய மீனவர் கால் துண்டானது.

Forums Communities Fishermen குமரியில் வலையின் கயிற்றில் சிக்கிய மீனவர் கால் துண்டானது.

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #6525
  Nandha Kumaran
  Participant

  கன்னியாகுமரியை சேர்ந்த மீனவர் பெஞ்சமின். இவர், அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் 9 பேருடன் சின்ன முட்டம் மீன் பிடித் துறைமுகத்திலிருந்து ஒரு விசைப்படகில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது மீன் பிடி வலையின் கயிறு, பெஞ்சமினின் காலில் சுற்றியுள்ளது. தொடர்ந்து, அந்த காயிறு காலில் இறுகி கால் துண்டாகியுள்ளது. இதனால், வலியால் அலறிய பெஞ்சமின் சற்று நேரத்தில் மயங்கியுள்ளார். அவரை சக மீனவர்கள் கரைக்கு அழைத்து வந்தனர். உடனடியாக, அவர் நாகர்கோயிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This