இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு!

Forums Communities Chennai இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு!

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #6518
  Kalyanaraman M
  Keymaster

  சென்னையில் பட்டபகலில் மதுபோதையில் கார் ஓட்டிய, இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில், வெள்ளிக்கிழமை மதியம்  சொகுசு கார் ஒன்று தாறுமாறாக ஓடியது. காவல்துறையினர் அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது, இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ், மதுபோதையில் காரை ஓட்டி வந்தது தெரிய வந்தது.இதனை தொடர்ந்து நுங்கம்பாக்கம் போக்குவரத்து போலீசார், காரை பறிமுதல் செய்து, அவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, மதுபோதையில் வாகனம் ஒட்டியாதாக, வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து, மனோஜ்-க்கு 2 ஆயிரத்து 500 ரூபாய், அபராதம் விதித்து இனிமேல் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது, என  போலீஸார் அறிவுறுத்தினர்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This