சென்னை: சென்னை புறநகர் பகுதியான சோழவரம் பகுதியில், பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய ரவுடிகள் பதுங்கியுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சோழவரம், காந்திநகர், ஆட்டந்தாங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதில் 53 ரவுடிகள் பிடிபட்டனர். அவர்களில் 10 பேர் பல்வேறு முக்கிய குற்ற சம்பவங்களில் தொடர்புள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.