‘புகைபிடிப்பது போன்ற காட்சியை,சர்கார்திரைப்படத்தில் இருந்தும், இணையதளங்களில் இருந்தும், உடனடியாக நீக்க வேண்டும்’ என, நடிகர் விஜய்க்கு, பொது சுகாதாரத்துறை, ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளது.சர்கார்திரைப்படத்தின் போஸ்டர், ஜூன், 21ல் வெளியானது. போஸ்டரில், நடிகர் விஜய், புகை பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றது. ‘இந்த போஸ்டர், புகையிலை விளம்பர தடை சட்டத்தை மீறிய செயல். மேலும், பிரபல நடிகர்களின் செய்கைகளை, இளைஞர்கள் அப்படியே பின்பற்றுவர் என, புகையிலை ஒழிப்பு ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
மேலும், ‘இளைஞர்களை, புகை பழக்கத்திற்கு அடிமையாக்கும் செயல்’ என, சில அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, தமிழகபொது சுகாதாரத்துறையின், புகையிலை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு சார்பில், படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், நடிகர் விஜய் மற்றும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோருக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டுள்ளது.