Forums › Communities › Farmers › மாடியில் போடும் தோட்டம் பற்றிய உங்களது அனைத்து சந்தேகங்களுக்கான பதில்களும்
- This topic has 0 replies, 1 voice, and was last updated 2 years, 7 months ago by
madhu balan.
-
AuthorPosts
-
July 7, 2018 at 8:06 am #6510
madhu balan
Participantஇனி ஒரே இடத்தில்….மிக அதிகமாக கேட்கபடும் கேள்விகள், மனதில் தோன்றும் குழப்பங்கள், பாதியில் ஏற்படும் தயக்கங்கள்,
அனைத்திற்கும் இனி கவலை இல்லாமல் விடை காணுங்கள்….
.1. டேராஸ் கார்டன் (அ) மாடித் தோட்டம் என்றால் என்ன?
நம் வீட்டின் மாடியில் செடி, கோடி, பூ, காய் கனிகளை வளர்ப்பது….அது மொட்டை மாடியாகவோ,பால்கனியாகவோ, வீட்டின் மேற்கூரையாகவோ இருக்கலாம். முன்பு வீட்டை சுற்றியிருந்த தோட்டத்திற்கு இன்று இடம் இல்லாமல் போனதால் அதை மாடிக்கு மாற்றல் செய்துவிட்டோம். நிலம் வாங்கி பயிர் செய்யும் பிரச்சனைகளும் இதில் இல்லாதது இவற்றை வரவேற்கதக்கதாக மாற்றியுள்ளது
. 2 மாடித் தோட்டம் எங்கு அமைக்கலாம்?
அடுக்குமாடி குடியிருப்புகள், தனி மாடி வீடுகள், அலுவலக வளாகங்கள், சேமிப்பு கிடங்குகள், மேலும் சில தொழிற்சாலைகளிலும் கூட அமைக்கலாம்.
3 டேராஸ் கார்டன் அமைப்பதற்கு முன் முக்கியமாக செய்ய வேண்டியவை என்ன?
மொட்டை மாடி என்பது ஒரு வீட்டின் கூரையாகும். அதனால் நீர் புக விடாதபடியான தகுந்த வாட்டர் ப்ரூப் கொண்டு தரையை நீர் கசிவு மற்றும் ஒழுகுதல் போன்றவற்றிலிருந்து காத்து கொண்டால் போதுமானது.
4.. செடிகளின் வேர்களால் தரைக்கோ அல்லது கட்டிடத்திற்கோ என்ன பாதிப்புகள் வரும்?
ஆணி வேர் கொண்ட செடிகள் (மரங்கள்) ஆபத்தானவை. அவை தங்களது ஷக்தியால்தரையை துளைக்கும் வல்லமை கொண்டவை.அதனால் ஜல்லி வேர் கொண்ட செடிகளே சிறந்தவை. அது போல காற்றினாலோ, பறவைகளாலோ விதைகள் நம் மண்ணில் விழுந்து வளர்ந்துவிடும் அவற்றை கவனமாக அகற்றி விட வேண்டும்.
5.எந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட வேண்டும்?
ஜனவரி: (மார்கழி, தை) கத்தரி, மிளகாய், பாகல், தக்காளி, பூசணி, சுரை, முள்ளங்கி, கீரைகள்.
§ பிப்ரவரி: (தை,மாசி) கத்தரி, தக்காளி, மிளகாய், பாகல், வெண்டை, சுரை, கொத்தவரை, பீர்க்கன், கீரைகள், கோவைக்காய்.
§ மார்ச்: (மாசி, பங்குனி) வெண்டை, பாகல், தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கன்.
§ ஏப்ரல்: (பங்குனி, சித்திரை) செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை.
§ மே: (சித்திரை, வைகாசி) செடி முருங்கை, கத்தரி, தக்காளி, கொத்தவரை.
§ ஜூன்: (வைகாசி, ஆனி) கத்தரி, தக்காளி, கோவை, பூசணி, கீரைகள், வெண்டை.
§ ஜூலை: (ஆனி, ஆடி) மிளகாய், பாகல், சுரை, பூசணி, பீர்க்கன், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, தக்காளி.
§ ஆகஸ்ட்:(ஆடி, ஆவணி) முள்ளங்கி, பீர்க்கன், பாகல், மிளகாய், வெண்டை, சுரை.
§ செப்டம்பர்: (ஆவணி, புரட்டாசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, கீரை, பீர்க்கன், பூசணி.
§ அக்டோபர்: (புரட்டாசி, ஐப்பசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி.
§ நவம்பர்: (ஐப்பசி, கார்த்திகை) செடிமுருங்கை, கத்தரி, தக்காளி, முள்ளங்கி, பூசணி.
டிசம்பர்: (கார்த்திகை, மார்கழி) கத்தரி, சுரை, தக்காளி, பூசணி, முள்ளங்கி, மிளகாய் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்
-
AuthorPosts
- You must be logged in to reply to this topic.