வளர்ச்சியை முடக்குவதே 8 வழிச்சாலை எதிர்ப்பாளர்களின் நோக்கம் – பொன்னார்

Forums Inmathi News வளர்ச்சியை முடக்குவதே 8 வழிச்சாலை எதிர்ப்பாளர்களின் நோக்கம் – பொன்னார்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #6450
    Kalyanaraman M
    Keymaster

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ, காங்கிரசில் இருந்து விலகி மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவில் இணைந்தார்.

    இது குறித்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னை துறைமுகம் விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது. இதில் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலும் பலர் பாஜகவில் இணைவார்கள் எனக் கூறினார். வரும் 9ந்தேதி பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா சென்னை வரும்போது தமிழகத்தில் பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் எனத் தெரிவித்தார்.

    யாரெல்லாம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடினார்களோ அவர்கள் தான் அங்கு வேலை இழந்த மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். வளர்ச்சித் திட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களை சமூகவிரோதிகள் என்று கூறுவதை விட பயங்கரவாதிகள் என்று கூறுவதுதான் சரியாக இருக்கும் என்ற பொன்.ராதாகிருஷ்ணன், தொழில் வளத்தை முடக்குவதுதான் அவர்களது நோக்கம் எனத் தெரிவித்தார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This