தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் சட்டம்

Forums Inmathi News தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் சட்டம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #6446
  Kalyanaraman M
  Keymaster

  தமிழகத்தில், தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் சட்டம், தனியார் பல்கலைகள் மற்றும் சட்ட கல்லுாரிகள் துவக்க அனுமதி அளிக்கும் சட்டம் உட்பட, ஆறு சட்டங்கள், நேற்று ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டன.

  தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் சட்டம்

  தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின், உயிர் மற்றும் உடமைகளுக்கு, பாதுகாப்பு அளிக்க வற்புறுத்தியும், கல்வி வியாபாரமாவதை தடுக்கவும், அடிப்படை கட்டமைப்பை உருவாக்கவும், அனுமதி வழங்கப்படாத பள்ளிகளில், குழந்தைகள் சேர்க்கப்படுவதை தடுக்கவும், குறைவான மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள், வாரியத்தேர்வு எழுதுவதை தடுப்போருக்கு, தண்டனை விதிக்கவும், இச்சட்டம் அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. தகுதி இல்லாதவர்களை, பணியில் அமர்த்தக் கூடாது. பணியாளர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு அம்சங்களும் சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

   

  சட்டக்கல்லுாரி

  ‘தனி நபர்கள் சட்ட கல்லுாரிகள் துவக்குவதை, முழுமையாக தடை செய்ய இயலாது’ என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, தனி நபர்கள் சட்ட கல்லுாரிகள் நிறுவுவதை ஒழுங்குமுறைப்படுத்த, புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This