உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகத்தில் அனைத்து அதிகாரமும் பொருந்தியவர் தலைமை நீதிபதி மட்டுமே என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி ஏ.கே சிக்ரி கொண்ட அமர்வு வழக்கை விசாரித்து, வழக்குகளை அமர்வுகளுக்கு ஒதுக்குவது தலைமை நீதிபதி அதிகாரத்துக்கு உட்பட்டது என்று உத்தரவிட்டது. தலைமை நீதிபதிக்கு பதிலாக 5 நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் வழக்குகளை ஒதுக்க கோரிய மனு தள்ளுபடி செய்தது. முன்னாள் அமைச்சர் சாந்தி பூஷண் தொடர்ந்த பொதுனநல வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு.