குளச்சலில் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் மீட்பு

Forums Communities Fishermen குளச்சலில் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் மீட்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #6435
    Nandha Kumaran
    Participant

    குளச்சல் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவியை மீனவர்கள் மீட்டனர்.   குளச்சல் மீன்பிடி துறைமுக மேற்கு தடுப்பு சுவரில் கான்கிரீட் சாலை  அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் நேற்று காலை 21 வயது மதிக்கத்தக்க   இளம்பெண் ஒருவர் ஸ்கூட்டரில் வந்து நின்றார். கடலை விரக்தியுடன் பார்த்து  கொண்டிருந்தவர் திடீரென கடலில் குதித்தார். இதை பார்த்த அந்த பகுதி  மீனவர்கள் விரைந்து சென்று கடலுக்குள் குதித்து இளம் பெண்ணை மீட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து   மீனவர்கள் பங்குதந்தை மற்றும் குளச்சல் மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல்  தெரிவித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி தலைமையிலான  போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து இளம் பெண்ணை  மீட்டு, காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அந்த இளம்  பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.இதில் இளம் பெண்  ஈத்தாமொழி பகுதியை சேர்ந்தவர் என்பதும், வெளியூரில் உள்ள கல்லூரி ஒன்றில்  படித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது பெற்றோருக்கு  தகவல் தெரிவித்தனர்.  இளம் பெண் என்ன காரணத்திற்காக தற்கொலைக்கு முயன்றார்  என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர். இந்த சம்பவம் குளச்சல் பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This