நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறை

Forums Communities Farmers நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #6384
  madhu balan
  Participant

   கரும்பு சாகுபடியில் ஒரு புதிய அணுகுமுறை மற்றும் நீர் சேமிப்பு வழிகளில் ஒரு புதிய முயற்சி. இந்த முறையில் விளைச்சலை அதிகப்படுத்தும் உத்திகளோடு, தண்ணீர் சேமிப்பு குறித்தும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, உற்பத்தி அதிகரிப்பதோடு நீர் நிலை ஆதாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கும் உறுதுணையாய் இவை இருக்குமென்பது உறுதியாகிறது. நீடித்த நவீன கரும்பு சாகுடிபடியானது குறைந்த அளவு பரு நாற்றுகள் மற்றும் குறைந்த அளவு தண்ணீரை உபயோகிப்பது, சரியான அளவு ஊட்டச்சத்து மற்றும் பயிர் பராமரிப்பின் மூலம் அதிக மகசூல் பெற வழிவகை செய்யும் சாகுபடி முறை.

  முக்கியக் கோட்பாடுகள் :
  • ஒரு விதைப்பரு சீவல்களிலிருந்துநாற்றங்கால் அமைத்தல்.
  • இளம் (25-35 நாட்கள் வயதான) நாற்றுகளை எடுத்து நடவு செய்தல்.
  • வரிசைக்கு வரிசை 5 அடி இடைவெளியும், நாற்றுக்கு நாற்று 2 அடி இடைவெளியும் பராமரித்தல்.
  • சொட்டு நீர்பாசனத்தின் வழி உரமிடுதல்.
  • இயற்கை சார்ந்த உரங்கள், பயிர்ப்பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முறைகளுக்கு போதிய அளவு முக்கியத்துவம் அளித்தல்.
  • ஊடு பயிரிட்டு மண் வளம் மற்றும் மகசூல் அதிகரிக்க வழி செய்தல்

  நீடித்த நவீன கரும்பு சாகுபடியின் பயன்கள் :
  • தண்ணீர் உபயோகிப்பு திறன் கூடுகிறது.
  • சரியான அளவு உரங்களை உபயோகிப்பதன் மூலம் பயிர்களுக்கு ஊட்டச்சத்து பராமரிப்பு சிறப்பாக அமைகிறது.
  • காற்று மற்றும் சூரிய ஒளி அதிக அளவு பயிர்களுக்கு கிடைக்கிறது. அதனால் கரும்பில் சர்க்கரை கட்டுமானம் அதிகரிக்கிறது.
  • மொத்த சாகுபடி செலவு குறைகிறது.
  • விவசாயிகளுக்கு ஊடுபயிர் மூலம் இரட்டை வருமானம் கிடைக்கிறது.
  • மகசூல் அதிகரிப்பு.

   

  • This topic was modified 2 years, 9 months ago by madhu balan.
Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This