வன்னியர் குல சத்திரியர்களின் நன்கொடை சொத்துகளை பாதுகாக்க நிர்வாக குழுமம்

Forums Inmathi News வன்னியர் குல சத்திரியர்களின் நன்கொடை சொத்துகளை பாதுகாக்க நிர்வாக குழுமம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #6376
  Kalyanaraman M
  Keymaster

  வன்னியர் குல சத்திரியர்களின் நன்கொடை சொத்துகளை  பாதுகாக்க நிர்வாக குழுமம் அமைபதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது-.

  சட்டப்பேரவையில் நேற்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி,  தமிழ்நாடு வன்னியகுலசத்திரியர் பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் பாதுகாத்தல் மற்றும் பேணிவருதல் சட்டமசோதாவை தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

  வன்னியர் சொத்து

  வன்னியகுல சத்திரியர் சமுதாயத்தை சேர்ந்த தாராள குணம் கொண்ட கொடையாளிகள் பல்வேறு அறச்செயல் நோக்கங்களுக்காக , தமதுசொத்துகளைக் காணிக்கையாக வழங்கினர். பல நிகழ்வுகளில் பல்வேறு அறச்செயல் நோக்கங்களுக்காக நிலைக் கொடையாகவழங்கப்பட்ட சொத்துகள், அறச்செயல் நோக்கங்களுக்காக பயன்படாமலும், நல்ல நிலையில் பராமரித்து வரப்படாமலும் இருக்கின்றன. அதுபோன்ற பல நிலைக்கொடைச் சொத்துகள் விற்கப்பட்டு விட்ட நிலையிலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலையிலும் இருக்கின்றன.இதனால் உயில் எழுதிய கொடையாளிகளின் விருப்பங்கள் நிறைவேறாமல் போய்விட்டன.

   

  பல முறைகேடுகள்

  அத்தகைய பொறுப்பாட்டிசிகளின் சொத்துகளையும், நிலைக் கொடையாளிகளின் சொத்துகளையும் பாதுகாப்பதற்கும், உயில் எழுதியகொடையாளிகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கும் இயலும் வகையில் அத்தகைய பொறுப்பாட்டிசிகளுக்கும், நிலைக்கொடைகளுக்கும் நல்ல நிர்வாகத்தை வழங்குவதற்காக தனி நிருவாகக்குழுமம் ஒன்றை அமைத்து உருவாக்குமாறும் அதன் மூலம் எந்தநோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை அடைவதற்கு இடர்பாடு எதுவுமின்றி எளிதாக்குமாறும் கோரி பல முறையீடுகள்அரசுக்கு வரப்பெற்றுள்ளன.

  அரசானது ஆழ்ந்த பரிசீலனைக்கு  பின்னர் வன்னியகுல சமுதாயத்தைச் சேர்ந்த நபர்களால் அல்லது நிறுவனங்களால் உருவாக்கப்பட்டஅத்தைகய பொறுப்பாட்சிகளின் சொத்துகளையும், நிலைக்கொடைகளின் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு நிருவாகக்குழுமம் ஒன்றைஅமைப்பதற்கு தனிச்சட்டம் இயற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டிருந்தது.

  இந்த சட்டமசோதா நேற்றே பேரவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, உறுப்பினர்களின் குரல் வாக்கெடுப்பு மூலம்நிறைவேற்றப்பட்டது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This