லோக் ஆயுக்தா சட்டம் வரும் கூட்டத்தொடரிலே தாக்கல் செய்யப்படும்

Forums Inmathi News லோக் ஆயுக்தா சட்டம் வரும் கூட்டத்தொடரிலே தாக்கல் செய்யப்படும்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #6375
  Kalyanaraman M
  Keymaster

  லோக் ஆயுக்தா சட்டம் , வரும் கூட்டத்தொடரிலேயே, அறிக்கை தாக்கல் செய்யப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

  தமிழக சட்டப்பேரவையில் நேற்று, பொதுத்துறை, நிதி துறை, வீட்டு வசதி மற்றும் பணியாளர்கள் நிர்வாக சீர்த்திருத்த துறை என 8 மானிய கோரிக்கை மீதான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

  இதில் பங்கேற்று பேசிய, திமுக உறுப்பினர் சேகர்பாபு ;  லோக் ஆயுக்தா எப்போது அமைக்கப்படும் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய , துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ; லோக் ஆயுக்தா, லோக் பால் சட்டம் விரைவில் தாக்கப்படும் என்றார்.

  இதை தொடர்ந்து பேசிய, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்; லோக் ஆயுக்தா சட்டம் அமைப்பது தொடர்பாக, 2014ம் ஆண்டில், ஜெயலலிதாவால் குழு அமைக்கப்பட்டது. ஊழலை ஒழிக்கும்  சட்டம் வரும் கூட்டத்தொடரில் அமைக்கப்படும் என்றார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This