நிலத்தின் உச்சவரம்பு 30 ஏக்கர்

Forums Inmathi News நிலத்தின் உச்சவரம்பு 30 ஏக்கர்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #6374
  Kalyanaraman M
  Keymaster

  தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு புதிய வசதி

  சட்டசபையில் மசோதா தாக்கல்

  தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் அனுமதி பெறாமல் வைத்துக் கொள்ள வேண்டிய நிலத்தின் உச்சவரம்பு 15 ஏக்கரில் இருந்து 30ஏக்கராக உயர்த்தப்பட்டுள்ளது.

  இதற்கான சட்ட மசோதாவை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வியாழக்கிழமை தாக்கல் செய்தார். அந்த மசோதாவில்கூறப்பட்டுள்ளதாவது:-

  தொழில் நிறுவங்கள்
  தமிழகத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு தொழில் அல்லது வணிக நிறுவனமும் உச்ச வரம்புக்கு மிகையாக நிலங்கள் வைத்துக்கொள்ளவோ அல்லது வாங்கவோ முடியாது. அரசிடம் இருந்து போதிய அனுமதியைப் பெற்று உச்சவரம்புக்கு மேல் நிலங்களை வைத்துக்கொள்ளலாம். இதன்படி, தொழில் அல்லது வணிக நிறுவனங்கள் 15 ஏக்கர் வரை மட்டுமே அனுமதியில்லாமல் நிலங்களை வைத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் நிலங்களை வைத்துக் கொள்ள அரசின் அனுமதி அவசியம்.

  கூடுதல் தேவை: இப்போது நிலவரப்படி, தொழில் நிறுவனத்துக்கு நில உச்சவரம்பு கூடுதலாகத் தேவைப்படுகிறது. தொழில் நிறுவனங்கள்உச்சவரம்புக்கு மேல் நிலங்கள் வைத்துக் கொள்ள வழிவகை செய்தால், மாநிலத்தின் தொழில்துறை முன்னேற்றமடையும். இவ்வாறானஉச்சவரம்பு அதிகரிப்பு, வணிகம் செய்தலை எளிதாக்குவதோடு, தொழில் நிறுவனங்கள் தாங்கள் வைத்துள்ள நிலங்களுக்கு அனுமதி பெறத்தேவை ஏற்படாது.

  எனவே, தொழில் அல்லது வணிக நிறுவனங்களின் உச்சவரம்பினை 15 ஏக்கரில் இருந்து 30 ஏக்கராக உயர்த்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.இந்த 30 ஏக்கர் உச்சவரம்பு உயர்வு என்பது புன்செய் நிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். இதனால், ரூ.20 கோடிக்குக் குறையாத முதலீடுகொண்ட தொழில் அல்லது வணிக நிறுவனங்கள் கவரப்படும். இவ்வாறு அதிகரிக்கப்பட்ட உச்ச வரம்பு நிலங்கள் தொழில்துறைக்கு மட்டுமேபயன்படுத்தப்பட வேண்டும்.

  இவ்வாறு  சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This